காற்றுக் காதலி



அதிகாலை வேளையில்
உனக்காகத் தான்
நடக்க ஆர்ம்பித்தேன்....

சில நேரம் தென்றலாய்த்
தேகம் தீண்டுகிறாய்!

சில நேரம் புயலாய்ப்
புரட்டிப் போடுகிறாய்!

வாரி விட்டத் தலைமுடியை
நீ கலைத்து மகிழ்வதையும்,

வண்டியில் போகும்போது
நீ உரசி மோதுவதையும் ,

விரும்பி ரசிக்கிறேன்

உலகின் எந்த மூலைக்குப் போனாலும்
உன் முகம் தான்,
உன் ஸ்பரிசம் தான்.

நாட்கணக்காய் உண்ண மறந்தாலும்,
நொடிப்பொழுதும் உனை மறந்தேனா?

உன்னையே உயிர் மூச்சாகக் கொண்டேன்
சாகும் வரையும் உன்னையே சுவாசித்திருப்பேன்.........

உன் தரிசனம்




கண் மூடிபடுத்தால்

உறக்கம் வரவில்லை;

உறக்கம் வந்தாலும்

கனவு வருவதில்லை;

கனவு வரும்போதிலும் - அதில்

கண்மணி நீ வருவதில்லை - என

மன உளைச்சலில் மருகி;

அதிகாலையில் உறங்கி ;

தாமதமாய் எழுந்து;

அவசரகதியில் இயங்கி;

நெருசலில் சிக்கி;

வியர்வையில் நனைந்து;

மனம் வெறுத்து

கல்லூரிக்குள் நுழைகையில்

அருகினில் உன் தரிசனம்;


எல்லாம் மறந்து ஒரு நிமிடம்

மனம் லேசாகிறது

புதிதாய் பிறந்ததாய்


இந்த ஒரு நொடிக்காக...

இது போல ஓராயிரம்

இன்னல்களை கடப்பேன்.

காதல் தேர்வு



எந்த தேர்விற்கும் நான் இவ்வளவு
தயார் செய்ததில்லை!

உன்னுடன் பேசும் முன்பு
என்ன பேச வேண்டும் என
பட்டியல் இடுகின்றேன்

பாவி மனது நீ ஹலோ சொன்னவுடன்
எல்லாவற்றையும் மறந்து விடுகிறது.....

எங்கேயடி கற்றுக்கொண்டாய்
ஒற்றை வார்த்தையில்
ஒருவனை சாய்ப்பதற்கு.....

கடலை





கடலை ரசித்தபடி

கடலைப் பார்த்தவாறு காற்றுவாங்கி

கடற்கரையில் தோழியுடன் இருக்கையில்

கடலை கடலை என்றான் சிறுவன்!

கடலை பொட்டலம் வாங்கி அவனை அனுப்பிவிட்டு

கடலை சாப்பிட்டவாறே பேசிக்கொண்டிருந்தோம்!

கடலைக் காணவந்தவன் ஒருவன்

கடலைப் பார்த்தபடி அருகில் வந்து கடலையா.................? என்றான்!

கடலை தான் கேட்கிறான் என்று

கடலைப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு

கடலைப் பார்த்தது போதுமென்று

கடலை விட்டு நீங்கி செல்கையில்

கடற்கரையில் கடலையா? எனக்கேட்டவன் கேட்ட

கடலை என்னவென்று தோழி எனக்கொரு

கடலை வகுப்பெடுத்தாள்!

கடலை போடுவது பற்றி!

கடலையில் இப்படியும் ஒரு வகையா? என

கடற்கரையை நினைத்து நகைத்தேன்!

கடலலைபோல் அவளும் சிரித்தாள்!

துயரம்



தூக்கியெறியப்பட்ட என் கனவுகள்,
தூங்க கூட முடியா துக்கம்,
துவண்டு போன தேகம்,
தேடியலைகிறேன் பாசத்தின் தடத்தை,
தொலைந்துப் போன பாதையிலும்
துரத்தி வரும் துன்பங்கள்....
திண்டாட்டங்களில் தட்டுத்தடுமாறி,
தவிடுப்பொடியான தருணங்கள்,
தீர்வுக்கூட வேண்டாம்,
திருப்பம் கூட இல்லையே....
துரதிர்ஷ்டத்தை தழுவிக் கொண்டு
தடுமாறும் வேளைகள்
துயரம் மட்டுமே துணையென
தூணில் சாயவும் தெம்பின்றி
துணிச்சலாய் சாகவும் தெளிவின்றி
தனிமையில் தவிக்கும் இந்நிலை
தயவுசெய்து வரவேண்டாம் யாருக்கும் தரணியிலே!!!

நட்புக்காக புதைக்கிறேன்





இன்று
எப்படியும்
சொல்லிவிட வேண்டும்
மனசு சொன்னது..........

இந்த வார்த்தைகள் ஒன்றும்
புதிதல்ல
ஆறு மாதமாக என்
இதயத்துடிப்பு .

வழக்கம் போல
இசைந்தேன்
என் மனதின்
அசைவுக்கு.......

இப்பொழுது
உன் முன்னால் நான்
ஆறு மாதத்திற்கு முன்னால் எழுதிய
அதே கடிதத்துடன்!

நீ
என்ன ?
என்றவுடன்
எல்லாம் மறந்து போச்சு!
பல நாட்களாக
கண்ணாடி முன் நின்று செய்த பயிற்சியெல்லாம்.....

எப்படி எடுத்துக்கொள்வாயோ
இந்த
ஹார்மோன் விளையாட்டை.

மறுத்துவிட்டால்
நம் நட்பு முறிந்துவிட்டால்

அய்யய்யோ !

கற்பனையிலும்
வார்த்தை இல்லை
அக்கணத்தை விவரிக்க .......

வேண்டாமடி

நட்புக்காக புதைக்கிறேன்
இந்த
ஒரு தலை காதலை......
ஹார்மோன் விளையாட்டை.......

உன்னை உணர்ந்தால்


அரக்கன் என்பவன்
அடுத்தவனல்ல –நம்
அகத்துள் இருப்பவன்!


இடுக்கண் தருபவன்
இறைவனல்ல –நம்
இதயத்துணர்வுகள்.

புரிந்துகொண்டால்
வெற்றியும்,தோல்வியும்
வேறொருவர் வசமில்லை
வீண்பழி சொல்ல!

வந்து போவதற்கு
துன்பமும், இன்பமும்
தூரத்தில் இல்லை
நம்மோடு தான்


விழித்தால் தான்
உறக்கம் கலையும்
அடிபட்டல் தான்
அனுபவம் கிடைக்கும்-உன்னை
உணர்ந்தால் தான் உலகம் புரியும்.

கசக்குதடி



உன்னை
மட்டும்
அதிகம் படித்ததாலோ
என்னவோ!
என்
கல்லூரி பாடம்
கசக்குதடி!

உணர்ச்சிப் பெருக்கு,






எப்படியும் ஒருநாள்
அடைந்து விடுவேன்
உன்னை .

உன்னை மட்டுமே
நேசிக்கிறேன்,
உனக்காகவே
சுவாசிக்கிறேன்.

உன்னை நினைத்தாலே
உணர்ச்சிப் பெருக்கு,
உள்ளத்தில்.......

உன்னை எனதக்கி கொள்ள
ஆணை இடுகிறது அடிமனம்.

ஒரு நாள்,
எப்படியும் நீ
என்வசம் ஆவாய்.

அந்த ஒரு நாளுக்காக
ஓயாமல் முயற்சிக்கிறேன்
பல ஆண்டுகளாக......

என்
செயல்
ஆற்றல்
எண்ணம்
எல்லாம்
உன்னை நோக்கியே......

என் உயிரையும்
விட தயாராக இருக்கிறேன்,
உன்னை அடைவதற்காக...

இதோ
எட்டி பிடித்து விடும் தொலைவில்
நீ...........

எப்படியும் உன்னை
அடைய வேண்டும் என்ற உத்வேகத்துடன்
நான்...........

நிச்சயம்
ஒரு நாள்,
நீ
எனதாவாய்.

அதுவரை காத்திரு,
நான்
நேசிக்கும் ,
சுவாசிக்கும்

வெற்றியே......................

சம்பத்துக்கு




நீரோடையாய் வந்தாய்
நீரூற்றாய் வாழ்ந்தாய்
நீர்வீழ்ச்சியாய் விழுந்தாய்
நீற்குமிளியாய் மறைந்தாய்

மீண்டும் எப்ப டா மாப்ள வருவ ..........?.
நான் இப்பெல்லாம் அலுவுறதே இல்ல டா.......
உன்ன நினைச்சு கூட அழுவுறது இல்ல மாப்ள......
ஏன்னா அழுதா ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்ல டா !
உன்பாட்டுக்கு போயி சேந்துட்ட ........

கிட்டத்தட்ட நான் பொணமாத்தான் டா வாழ்ந்துகிட்டு இருக்கேன்,,,,,,,
பேசாததுனால உன்ன போதச்சுட்டங்க...
பேசிக்கிட்டு இருக்குறதுனால என்ன விட்டு வச்சுருக்காங்க......

தனிமை


சில நேரம் கொடுமை....
சில நேரம் இனிமை ....
நிழல் சாலையில்
இப்படி சாய்ந்து
கடந்த காலம்
அசைபோடுகையில்
பிடித்து போகிறது தனிமை...
சில நேரம்
நேற்று வரை இருந்து
காலத்தால் பிரிந்த நட்போ
இல்லை காதலோ !
போய்விட்டபோது கொடுமை....
ரசனை என்று வரும்போது
எதை எல்லாமோ மறந்து
வெற்றிடமான மனதோடு
மெல்லிய இசை கேட்டு
மனம் சாய
இந்த தனிமை ரொம்ப
இனிமை....

என்னை தொலைத்த காதலி


காதலுக்கு
அர்த்தம் கேட்டார்
கடவுள்.
என்னை காட்டினேன்.
காரணம் கேட்டார்
உன்னை காட்டினேன்.


நீ அழகாய்
இருக்கிற ரகசியம்
கண்கள்ள்ள்ள்ள்...
சம்பந்தபட்டதன்று
வெறும்
கண்கள்
சம்பந்தப்பட்டது.


ஆழ்ந்து சுவாசி
உணர முடியும்
முற்பிறவியில்
நீ வாழை மரம்.
நான் பக்ககன்று.


நீ விரும்பி
விளையாடும் பொம்மை
என்பதால்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
என்னை.


நீ நடந்த
தடங்களின்
அடியில்தான்
கிடக்கிறது
நம் மணல்.
மணல் என்றால் மணல்.
மனசென்றால் மனசு.


என் தூக்கத்தை
திறக்கும் சாவியும்
திறக்காத சாமர்த்தியமும்
உன்னிடமிருந்தது.


காலாகாலத்திற்கும்
சொல்லி சிரிக்கும்தானே
ஆமையின் தூக்கமின்மையை
முயல்கள்.


கும்மிருட்டின் மின்மினி
ஓவியம் நீ.
தூக்கணாங்கூட்டின்
குஞ்சு பறவை நான்.
இணைக்காது போனதடி
இயற்கை.


உன்னை தேடி அடைய
எனக்கு பிடிக்கிறது.
என்னை தொலைத்து விளையாட
உனக்கு பிடிக்கிறது.


ஆட்களற்ற திருவிழாவில்
தொலைத்தாய் என்னை
அழுது புலம்புவது
தொலைந்தற்க்கன்று
நீ தேட மறந்தது கண்டு.


உனை போன்றே
நேர்த்தியாக
இருந்தது.
என் நெஞ்சு குழியில்
நீ பாய்ச்சிய
நெளி கத்தியின்
கூர்மை.


உன் பிரசவ
வேதனை
எனக்கு என்
கவிதைகள்.


உன் மகனுக்காக
வேண்டுகிறேன்
அவனாவது
கவிதை
கிறுக்காதிருக்கட்டும்
.

பட்டாம்பூச்சி வாழ்க்கை



வாழ்க்கை ரொம்ப அழகான விஷயம்ங்க.நம்மில் நிறைய பேருக்கு இது தெரிஞ்சும் தெரியாத மாதிரி ஏன் நடந்துக்குறோம்னுதான் தெரியலை.


சுய கவுரவம்,அதிகாரம்,பதவி,போட்டி,பொறாமை இப்படி பல உயிரற்ற விஷயங்களுக்காக உயிருள்ள நம் சக மனிதர்களை பாடாய்படுத்துகிறோம்.


எத்தனையோ பெரியமனிதர்கள், சித்தர்கள், மகான்கள் சொல்லிக்கொடுத்த அனுபவங்களை படித்தும்-கேட்டும்,நாம் நம்மை மாற்றிகொள்ள தயாராக இல்லை.இந்த வேகமான யுகத்தில் நம்முடைய சக மனிதர்களை பற்றி யோசிக்கவும் நேரமில்லை.


கடவுள் இல்லைன்னு சொல்ற ஒருத்தர்.கண்டிப்பா இருக்கார்னு சொல்ற ஒருத்தர்.அரசாங்கம் சரியில்லைன்னு சொல்ற ஒருத்தர்.நல்லா ஆட்சி பண்றாங்கப்பான்னு சொல்ற ஒருத்தர்.சிலருக்கு காமெடி பிடிக்கும்,சிலருக்கு அழுகைதான் பிடிக்கும்.


சிலருக்கு பேச பிடிக்கும்,சிலருக்கு கேட்ட மட்டும்தான் பிடிக்கும்.எனக்கு இந்த உலகத்தில் உள்ள எல்லாமே பிடிக்கும்னு சொல்ற ஆட்களை வலைவீசி தேடி பிடிக்கவேண்டும். இப்ப நீங்க என்ன செய்யணும்ன்னு கேட்கறீங்களா? நீங்க எதுவும் கெட்டது பேசாம/நினைக்காம/பண்ணாம இருந்தா போதும்.நீங்கன்னா இதை படிக்கிறவங்க இல்லை.அப்படி பண்றவங்களை சொல்றேன்.


நான் யாருக்கு கெட்டது பண்ணேன்னு கேட்குறீங்களா? நாம ஒருத்தரை கொலை பண்றதுதான் கெட்டதுன்னு இல்ல.சக ஊழியர்களை,சக மனிதர்களை,உறவினர்களை,நண்பர்களை பத்தி அவங்க இல்லாதபோது தப்பா பேசறதும் ,மேலதிகாரி கேட்கலைன்னாலும் போட்டு கொடுக்கறதும்,நம்பிக்கை துரோகம் பண்றதும் கூட கெட்டதுதாங்க.


என்ன அநியாயமா இருக்கு இது? என்னை காப்பாதிக்க அடுத்தவனை போட்டுகொடுக்கறது தப்பா?ஒரு ஜாலிக்காக நண்பனை வேறுபேத்தறது தப்பான்னு நீங்க கேட்கறது எனக்கு இங்கே கேட்குதுங்க.


ஆனா நம்ம நல்லதுக்காக இன்னொருத்தனை பத்தி தப்பா சொல்றது தப்புதானே?நம்ம சந்தோசத்துக்காக அடுத்தவனை கிண்டல் பண்றது தப்புதானே?


வாழ்க்கை ஒரு பட்டாம்பூச்சி மாதிரி.கொஞ்ச காலம் தான் வாழ முடியும்.அது எப்போ முடியும்ன்னு யாராலும் சொல்ல முடியாது.அதே மாதிரிதான் இந்த பட்டாம்பூச்சி சுதந்திரமா பறக்கும்வரை சந்தோஷ காற்றை சுவாசிக்கலாம்.


சந்தோசம்,பணம்,ஆசை என்பதெல்லாம் நல்லா வீசுற காத்துமாதிரி.ஒரு நாள் என்பக்கம் வீசும், மறுநாள் அடுத்தவன் பக்கம் வீசும்.காத்தை பிடிச்சி நம் பாக்கெட்டில் போட முடியாதுல்ல?


வாங்க கொஞ்சம் யோசிச்சு, நிறைய பேரை சந்தோஷப்படுத்தலாம்.

கொடிய இரவு


இந்நேரம்
மின்விசிறியின் துணையால்
நீ தூங்கி கொண்டு இருப்பாய்.
நானோ விண்மீன்களை எண்ணிக்கொண்டு
முழித்துகொண்டு இருக்கிறேன்.....

உன் மனம் முழுக்க கனவுகளோடு
என் மனமோ உன் நினைவுகளோடு.....

ராசாத்தி நீ தூங்கு,
நட்சத்திரத்தின் ஒளியோடு.
செல்லமே நீ தூங்கு,
மெல்லமாய் மடிமீது.

ஒரு இரவு உனக்கு,
ஒரு ஜென்மம் எனக்கு.....

ஒரு பகல் உனக்கு,
ஒரு நொடிதான் எனக்கு.....

காலையில் பேசலாம் நேரம் கிடைத்தால்,
நம்காலம் வரை பேசலாம் வாய்ப்பு கிடைத்தால் !!!!

நரகத்திலிருந்து எழுதுகிறேன்


ஒவ்வொரு காலையும்
சோம்பல் முறிக்கையில்
கடந்த கால நினைவுகள்
என் கால்களை இடறும்..!!

கால்களை உதறி
நிகழ் காலத்தில் பிரவேசிக்க,
மீண்டும் பிடித்திழுத்து
வல் வளைப்பு செய்யும்...!!

எதிர்கால கனவுகள் போல்,
கடந்தகால நினைவுகள்
ஒன்றும் பாசமானவையல்லவே...

அவற்றின் பயங்கரத்தில்
என் பாசமான கனவுகள்
துகிலாய் உரியப்பட,
நிகழ்காலமும் நரகமாகும்..!!

நரகத்திலிருந்து எழுதுகிறேன்

புன்னகையால் நனைத்துக்கொள்..


அழும்படி
உன்னைப் பணிக்கும்
கடவுளை
உனக்காக நேர்ந்துக் கொள்ளும்படி
நீ பணிக்கலாம்...

இரவுகளைகைக்
குட்டையாக்கி
அடிக்கடி ஈரப்படுத்தாமல்
வெளிச்சம் மங்கும் பகல்களை
ஒரு தொட்டி நீரில் ஊற வைக்க முயற்சிக்கலாம்..

உன்
பதற்றங்களை பல்லிடுக்கில் செருகி..
உடனே கடித்துத் துப்பிவிடுவதால்..
மீண்டும் நகமென வளருமேயென
யோசனைத் தேவையில்லை..

வாழ்வதற்கான பக்குவத்தை..
திருமணப் பத்திரிகையில்
யாரும் அச்சடிப்பதில்லை..

அவ்வப்போது
உலரும் உதடுகளை
புன்னகையால் நனைத்துக்கொள்..

வரவேற்பறையில்..

விருந்தினர்கள்
காத்திருக்கக் கூடும்..!


myfreecopyright.com registered & protected

சுடுவதற்கு தடை

Creative Commons License
சத்யாவின் குட்டி டைரி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

நான்...

My photo
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நட்போடு சத்யா...

என் ஊக்க மாத்திரைகள்



சிலருக்கு பிடித்திருக்கலாம்! – மகிழ்ச்சி

பலரை இம்சித்திருக்கலாம்! – மன்னிக்க!


திட்டோ?
பாராட்டோ?


9003327433

LSATHYA.CSE@GMAIL.COM

எனக்கு தெரியும்


Template Brought by :

blogger templates

Best Blogger Gadgets