பிரிந்து போன என் உயிரின் பிறந்தநாள் இன்று
வார்த்தைகளற்ற நடுநிசியில் பொத்துக்கொண்டு வரும் அழுகை தொண்டை குழி வரை நிரம்பி வழியும் இந்த பொழுதில் உன்னை நினைக்காமல் எப்படி என்னால் இருக்க முடியும் . உனக்கான எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு என் உயிரை மட்டும் எடுத்துக்கொண்டு போன என் உயிரானவன் நீ , எப்படி சமதானப்படுதியும் தனிமை கண்டுபிடித்து இன்னும் கொஞ்சம் அழுக வேண்டும் போல உள்ளது இந்த பாவி மனதுக்கு .
பனிரெண்டு மணி தாண்டி அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?
உலகத்தின் நிழல் மறையும்,
முற்றிலும் இருள் கவியும்,
பின்னிரவுகளில்
விண்மீன்களும் தூங்க சென்ற பின்னே
மெதுவாய் விழிக்கின்றன
உன் நினைவுகள்...
தாகமின்றி உடையாத நீர்குமிழியாய்,
இங்கும் அங்கும் நகர்ந்துகொண்டே இருக்கிறது
உன் நினைவுகள் ...
அழவும் மனமில்லை,
என் கண்ணீரில்
உன் நினைவுகள்
கரைந்துவிடும்
என்கிற பயம்...
மூளைக்குள் உணர்கிறேன் அந்த மயான காட்சிகளை
துக்கம் சுமந்தவர்கள் அலைந்தபடி இருந்தார்கள்,
அவர்கள் அமர்ந்தவுடன்,
சங்கின் ஒலி இதயத்துக்குள்...
லப்டப் அடித்து நமத்து போனது.
சவப்பெட்டியை எடுத்து
என் ஆத்மாவை அடைத்தார்கள்.,
கயறு கட்டி குழிக்குள் இறக்கினார்கள்,
பாவி நானும் ஒரு பிடி மண் போட ,
மள மளவென குழியும் நிரம்ப ...
உறங்கிய உன்னை
இறந்ததாய் கூறி
புதைத்த தருவாயில்....
உலகின் ஒட்டுமொத வேதனைகளும்
ஓரிடம் சேர கண்டேன்.
உன்னை இழந்தேன் என்பதை நான் நம்ப மறுத்தாலும்,
தொடர்ந்து என்னை
என்னாலலேயே
ஏமாற்றிக்கொள்ள இயலாததால்,
இன்று ஊர்கிதப்படுதி கொள்கிறேன்.
நிறுத்தாத பேசும்
நிமிடத்திற்கு ஒரு அழைப்புமாய்
இருந்த நீ
இன்று இல்லை ...
நீ இருந்து
நான் இறந்திருந்தால்
உணர்ந்திருப்பாய் என் வேதனைகளை...
என் பிரியமான பாவியே
நிலைக்க தெம்பில்லா
நெஞ்சம் கொண்ட
உன்னை மட்டுமா நான் இழந்தேன்
மென்மையும் உண்மையும்
குழைத்துக்கட்டிய
சிம்மாசனத்தில் வீற்றிருந்த
என்னையுமல்லவா இழந்தேன் ...
நீ
விட்டுசென்ற
நினைவுகளின்
மிச்சங்களில்தான்
இன்று உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் ....
மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால்,
மீண்டும் நண்பனாய் நீ வேண்டும் ...
அப்பவாச்சும் என் கூட கடைசி வரைக்கும் இருப்பியா மாப்ள?
12/24/2010 03:47:00 PM
|
Labels:
கவிதைகள்,
சம்பத் ஒரு சகாப்தம்
|
Subscribe to:
Post Comments (Atom)
சுடுவதற்கு தடை
சத்யாவின் குட்டி டைரி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
நான்...
- சத்யா
- புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நட்போடு சத்யா...
என் ஊக்க மாத்திரைகள்
சிலருக்கு பிடித்திருக்கலாம்! – மகிழ்ச்சி
பலரை இம்சித்திருக்கலாம்! – மன்னிக்க!
திட்டோ?
பாராட்டோ?
9003327433
பாராட்டோ?
9003327433
LSATHYA.CSE@GMAIL.COM
4 comments:
Fantastic lines...
நீ இருந்து
நான் இறந்திருந்தால்
உணர்ந்திருப்பாய் என் வேதனைகளை.....
பனிரெண்டு மணி தாண்டி அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?
He is always with u sathya....
நிரந்தரம் இல்லாத வாழ்கையில் நிரந்தரமான ஒரு நட்பு ....
தன்னோடு இருந்தவன் இன்று இல்லை என்று எண்ணி 2நாள்...2மாதம்.... 2வருடங்கள் வருத்தப்பட்டு மறக்கும் நண்பர்கள் மத்தியில்
என் வாழ்கையில் என்றுமே நீ இருகிறாய் என்று நினைத்து வாழும் உன்னுடன் நீ வாழும்வரை அவனும் வாழ்ந்து கொண்டிருப்பான்...
Post a Comment