தலைப்பு தெரியவில்லை
நட்பா ?
காதலா ?
தலைப்பு தெரியவில்லை
எப்படி உன்னை அழைப்பது
என்னவளே என்றா?
என் தோழியே என்றா?
பதில் தெரியவில்லை,
இந்த கவிதைக்கு தலைப்பும் தெரியவில்லை.
ஜன்னல் ஓர இருக்கையில் வீசும்
காற்றின் வருடலில்
உன் ஸ்பரிசத்தை உணர்கிறேன்.
அர்த்தம் புரியவில்லை இந்த வருடலுக்கு,
தலைப்பு தெரியவில்லை இந்த கவிதைக்கு.
உணவு உன்ன செல்லும் முன்
ஒரு நிமிடம் நினைக்கிறேன் ,
நீயும் உண்டிருப்பாயா என்று
அர்த்தம் புரியவில்லை இந்த உணர்விற்கு,
தலைப்பு தெரியவில்லை இந்த கவிதைக்கு.
தேர்வு அறையில் எல்லோரும்
விடையை வரையறுக்க ,
என் மனம் மட்டும் உன்னை வரையறுப்பது ஏன் ?
விடை தெரியவில்லை ,
இந்த கவிதைக்கு தலைப்பும் தெரியவில்லை.
பல பெண்களை கடந்து வந்த எனக்கு
உன்னை மட்டும் கடந்து செல்ல மனமில்லை ,
ஏன் இந்த மன மறுப்பு ?
புரியவில்லை ,
இந்த கவிதைக்கு தலைப்பும் தெரியவில்லை.
என் கைபேசிக்கு
SMS வரும்போதெல்லாம்
அது நீயாக இருக்க வேண்டும் என்ற
வேண்டுதலுடன் திறக்கிறேன்.
ஏன் இந்த வேண்டுதல்?
தெரியவில்லை,
இந்த கவிதைக்கு தலைப்பும் தெரியவில்லை.
நண்பர் கூட்டம் நம்மை
இணைத்து பேசும் பொது
கோபிக்காமல் நகைக்கிறேன்,
அர்த்தம் புரியவில்லை இந்த நகைப்பிற்கு
தலைப்பும் தெரியவில்லை இந்த கவிதைக்கு.
வண்டி ஓட்டும் போது
ரோட்டில் கவனம் வைத்து ஓட்ட வேண்டுமாம்,
அப்பொழுது கூட என் கவனம்
உன்னிடமிருந்து இறங்க மறுப்பது
ஏன் என்று தெரியவில்லை
இந்த கவிதைக்கு தலைப்பும் தெரியவில்லை
உன்னை பார்த்துக் கொண்டிருக்கையில்
வருடங்கள் நிமிடங்களாகவும்
உன்னை நினைத்துக் கொண்டிருக்கையில்
நிமிடங்கள் வருடங்களாகவும்
மாறிப் போவது ஏன்னென்று தெரியவில்லை
இந்த கவிதைக்கு தலைப்பும் தெரியவில்லை.
C, C++, JAVA என
பல மொழி புரிந்த
இந்த மென்பொருளாளனுக்கு
உன் விழி பேசும் மௌன மொழி மட்டும்
புரியாதது என்னென்று தெரியவில்லை,
இந்த கவிதைக்கு தலைப்பும் தெரியவில்லை.
" உன் கவனம் படிப்பில் இல்லை "
இது மதிப்பெண் குறைந்தபோது
என் தந்தை சொன்னது.
என் கவனம் முழுவதும் உன் மீது இருப்பது
பாவம் அவருக்கு தெரியவில்லை.
இந்த கவிதைக்கு தலைப்பிட
எனக்கு தெரியவில்லை.
1/13/2010 09:02:00 PM
|
Labels:
கவிதைகள்
|
சுடுவதற்கு தடை
சத்யாவின் குட்டி டைரி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
நான்...
- சத்யா
- புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நட்போடு சத்யா...
என் ஊக்க மாத்திரைகள்
சிலருக்கு பிடித்திருக்கலாம்! – மகிழ்ச்சி
பலரை இம்சித்திருக்கலாம்! – மன்னிக்க!
பாராட்டோ?
9003327433
0 comments:
Post a Comment