சம்பத் ஒரு சகாப்தம்

14.8.2009 முதல் நான்
தனிமரம் ஆனேன்...
சம்பத் என்னை தனியா விட்டுட்டு போய்ட்டான்,
என்னை முழுமையா புரிஞ்சுக்குட்ட
முதல் நண்பன்,
ஒரே நண்பன்.

ஆரம்பத்தில் என்னால் தாங்க

முடியவில்லை....
இப்பொழுது பழக முயற்சிக்கிறேன்...
தனிமையில் இருக்க....
பழக்கப்பட்டு விடும் என்ற
நம்பிக்கை இருக்கிறது ....

எல்லா வற்றையும் மறக்க நினைக்கிறேன்...
மறக்க முடியவில்லை.....
தனிமையின் புலம்பலாய் போகின்றன
என் மௌனங்கள் ....

என்னோட சோகங்களை நான்
யார்கிட்டயும் பகிர்ந்துகொள்ள விரும்பல
என்னை பார்த்து பிறர் வருத்தப்படுவதை
நான் விரும்பவில்லை.

மனது வலிக்கின்ற போதெல்லாம்
புல்தரையில் புலம்புகிறேன்
புர்க்களோடு...
அதுவும் என் வேதனையை கேட்டு
அழுது விடுகிறது...
அதன் மேல் கண்ணீரை காண்கிறேன்

எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.....
என்னால் முடியவில்லை ....
என் சிறிய மனம் குழந்தையைப் போன்று
திரும்ப திரும்ப பழயதை
நினைவுக்கு கொண்டு வந்து விடுகின்றது.....

கல்லாய் இருக்கும் கடவுளுக்கு நன்றி
சொல்லுறேன் ,
ஒரு நல்ல உள்ளதோடு சிலநாள் பழகுற
வரத்தை எனக்கு கொடுத்ததுக்காக

கடவுள்னு நீங்க சொல்லுற
கல்லை வெறுக்குறேன் ,
நல்லவன் யாரு கேட்டவன் யாருன்னு
பாக்காம
எல்லோரையும் கொன்னு குவிக்குற
சர்வாதிகாரி அந்த கடவுள்

மாப்ள,

நீ என்னோடு இருந்தப்ப
எப்போதோ எடுத்த நிழற்படங்கள்

நீ இப்ப என்னோடு இல்லாத
நிஜத்தை நினைவுபடுத்தும் போதெல்லாம்
நிஜத்தில் உன் நினைவுகள் என் நிழலாய் என்றும்
என்னுடன் இருப்பதை ஏனோ மறுக்க முடிவதில்லை.....

உன்னைப் போலவே
உன் நினைவுகளும்
விசித்திரமானவை தான்...
உன்னோடு ,
என்றோ சிரித்ததை நினைத்தால்
இன்று அழுகை வருகிறது...

பிரிவு என்பது யாராலும்

மறக்க முடியாத வலி...
நினைவு என்பது யாராலும்
திருட முடியாத பரிசு...
உன்னுடைய பரிசுகளும்
என்னுடைய வலிகளும்
அடிக்கடி பலப்பரிட்சை செய்கின்றன
கடைசில ஜெயிப்பது என்னவோ
என்னோட வலிகள் தான் .

என்றேனும் ஒரு நாள்

உன் நினைவலைகளில்
என் ஞாபகம் வந்தால்
ஒரு முறை வந்து போடா மாப்ள...

பொக்கிஷங்கள்


நீ தலைகோதி முடித்தவுடன்
சுருட்டி எறிந்த முடி,

விரல்களைத் தாண்டி வளர்ந்ததால்
வெட்டப்பட்ட நகத்துண்டு ,

மாலையில் வீசி எறியும்
காய்ந்த பூக்கள்,
இவையெல்லாம் மீண்டும் வேண்டும் என்றால்
எங்கும் தேடாதே !!!
என்னிடத்தில் வா...
பத்திரமாக இருக்கிறது

பொருள்களாக அல்ல
பொக்கிஷங்களாக ...!

கடைசியாய் நானும்





உன்னை முதல் முதலாய் பார்த்த போது
நீ சிந்திய வெட்கத்தின் ஓசை
இன்னும் என் காதுகளில்...


உன்னிடம் முதல் முதலாய்
பேசிய என் வார்த்தைகளின் வாசம்
இன்னும் என் நாசியில்...

உன்னிடம் பெற்ற முதல்
தேநீர் கோப்பை சுட்ட வட
இன்னும் என் விரல்களில்...

உனது விழியால் விடுத்த முதல்
அழைப்பின் தாக்கம்
இன்னும் என் கண்களில்...

உனது கூந்தல் என் மேல் உதிர்த்த முதல்
மல்லிகை பூ
இன்னும் என் கைகளில்...

உனது முதல் தொலைபேசி அழைப்பின்
மணி துளிகள்
இன்னும் என் கடிகாரத்தில்...

இப்படிகாலத்தை வென்று விட முயற்சிப்பவர்களின்
பட்டியலில் கடைசியாய் நானும்.....

சொர்க்கத்தில் இருந்து நரகத்தை நோக்கி


ஒன்பது மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனும் கெளம்பும் போது
நான் மட்டும் தூங்கிக்கிட்ருப்பேன்
எட்டு முப்பது ஆகுற வரைக்கும்...

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோற்றது இல்ல

விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சா,
வேற எதுவும் யோசிக்காம
வேக வேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல துறையூர் போயி
தியேட்டர்ல படம் பாக்க!

'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாலியறுப்பான்!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல.
ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பது பேர் பாஸ் ஆனதுண்டு!

நம் நட்பில் கவலைக்கு இடமேஇல்லை

வகுப்பு ஏட்டில் பெயர் இருக்கிறது,
ஆள் யார்?அது வாத்தியருக்கு விளங்கவில்லை

ஆறு மாதம் முக்கி முக்கி படிக்க வேண்டியதை
ஒரே இரவில் எப்படி படிக்கிறோமோ தெரியவில்லை

ஒரே வண்டியில் நான்கு பேர் சென்று
சறுக்கி விழுந்த போது வலி தெரியவில்லை

எதையும் நண்பணிடத்தில் மறைத்ததில்லை
சுற்றுச் சூழலை நினைத்ததில்லை

பல மொழிகள் பேசும் மாணவர்கள் இருந்தாலும்
நட்புக்கு மட்டும் மொழி இருந்ததில்லை

வகுப்பை தவிர கல்லூரியின் மற்ற இடங்களில்
நாம் கால் வைக்காத இடமில்லை

வந்த முதல் நாளில், தெரிந்தவர் தவிர
வேறொருவருடன் பேசி நினைவில்லை

ஒரே வாரத்தில் மாமன் மச்சான் உறவு
எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை

கல்லூரி முடிந்தும் வீடு திரும்ப மனமில்லை
நட்புக்கு மட்டும் என்றும் விடுமுறையில்லை

பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,

மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!

படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...

அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

exam time ல உதவி பண்ணுற நன்பனை பார்த்து
மனசு கட்டபொம்மனா
நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா
கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம,
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
சமாளிச்சி எழுந்து போவோம்...

நாட்கள் நகர நகர,
வருஷங்கள் ஓடுது,
மனசு கணக்குது,

மிச்சம் இருப்பது இன்னும் ஒரு வருஷம் தான்,
பிரிவை நினைத்தாலே கொடுமையா இருக்கு,

இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,

தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா' 'மச்சான்' மாறாது!

உண்மைக் காதல்.....


நீ என்னை மறந்து,
நான் உன்னை மறந்து,

நாம் உலகத்தினை மறந்து,

உயிர் தந்த பெற்றோரை மறந்து,
உடனிருக்கும் நட்பினை மறந்து,
தொலைபேசியில் மணிகணக்காய்,
அரட்டை அடிப்பதில் இல்லை -
உண்மைக் காதல்.....

கடற்கரையில் அமர்ந்து,
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து,
கனவு காண்பதில் இல்லை -
உண்மைக் காதல்.....

உல்லாச உணவகங்களில்
ஒரு குவளை தேநீரை
ஒரு மணி நேரம் உறிஞ்சுவதில் இல்லை-
உண்மைக் காதல்.....

பிறகு ,
உண்மைக் காதல் எது ?
என்று தானே கேட்கிறாய்...
அதை தான் நானும்
தேடிக்கொண்டு இருக்கிறேன், பல ஆண்டுகளாக.

இறைவனுக்கு

அன்புள்ள இறைவனே,

ஆத்திரத்தில் நான் எழுதும் கடிதம்...

நான் இங்கு நலம் இல்லை...

நீயங்கு நலமா ???

கண்டிப்பாக நலமாகத்தான் இருப்பாய்...

நாங்கள் படும் வேதனையை

கண்டு களிப்பவனாயிற்றே நீ...

ஆகையால் தான் கூறினேன்.

இங்குள்ள அனைவருக்கும் உள்ள

பிரச்சனைகள் வேறு வேறு விதம்...

ஆனால் எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம்,

பாழாய்ப்போன இந்த காதல் தான்...

இவற்றில் இருந்து மீண்டு வருவதற்கு

மூன்று வழிகளை கூறுகிறேன்

தயவுசெய்து அதனை செய்து விடு இறைவா!!!

ஒன்று, காதலை அடியொடுபிடிங்கி விடு

இரண்டு, ஆண்களின் கண்களைபறித்து விடு

மூன்று, பெண்களுக்கு காதலிக்க கற்று கொடுத்து விடு....

இதில் எதாவது ஒன்று நிகழ்ந்தாலும்

நிச்சயம் இந்த உலகம் அமைதி பெரும்.

இறைவனே!!! தகவல் கிடைத்தவுடன்

பதில்கடிதம் அனுப்பவும்...

பதிலை எதிர் பார்த்து ,

- சத்யா

GOOGLE

எனக்கும் GOOGLE KKUM சண்டை
வந்தது.....
எதை கொடுத்தாலும் ஏதாவது நான்கைந்து
இணைய தள முகவரிகளை
கொடுத்துக் கொண்டிருந்தது.....
நான் தோற்று விடுவேனோ
என்று நினைத்தேன்.....
சட்டென்று நினைவுக்கு வந்தது
உன் நினைவுகள்....
உன் அழகுக்கு இணையான பெண்ணும்
இந்த பூமியில் உண்டா?
என்று வினா தொடுத்தேன்.....
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது.,

திரும்ப தேடும் நாட்கள்...


நாம் எப்போதோ

தொலைத்த

இந்த நாட்களை

திரும்ப தேடுகிறோமா ?

கவலை இல்லாது

தேடல் இல்லாது

ஆடி சிரித்து

ஆனந்த பட்ட

நாட்களை !


உருண்டோடும்

காலத்தில்

இப்போதெல்லாம்

கடமைக்காய்

கொஞ்ச நாள் !

குடும்பதிற்காய்

கொஞ்ச நாள் !

இப்படியே கரையும்

காலத்தில்

நம்மை நாம்

எப்போதோ தொலைத்துவிட்டு

எங்கெங்கோ தெடுகிறோம்.....

எல்லோரும் அமர்ந்திருந்த

அந்த‌க் கூட்ட‌த்தில்
என்னை ம‌ட்டும்
பார்த்துக்கொண்டிருந்த‌ன‌
அந்த‌ இருவிழிக‌ள்.

த‌ன‌க்கான‌ பார்வையை
என்னிட‌மிருந்து
எதிர்பார்த்து காத்திருந்த
அந்த‌ விழிகளை
கடைசிவரை பார்க்காமல்
வெகு இய‌ல்பாய்
த‌விர்த்தேன்.

எல்லோரும் க‌லைந்து
சென்ற‌ன‌ர்.
வ‌ருட‌ங்க‌ள் ப‌ல
க‌ழிந்த‌ பின்ன‌ரும்
இமைமூடி பார்த்துக் கொண்டே
இருக்கிறேன் அன்று
த‌விர்த்த அந்த‌விழிக‌ளை.

காதலர் தினம்


நீ முதன்முதலாய் எனை பார்த்த நாள்..
நீ பார்த்து புன்னகை செய்த நாள்..
உன்னோடு கைக்குலுக்கிய நாள்..
பேருந்தில் உன்னருகில பயணித்த நாள்..
செல்லிடைப்பேசிக்கு உன் அழைப்பு வந்த நாள்..
நீ அறியாமலேயெ உனை பின் தொடர்ந்த நாள்..
எனக்கு பிடித்த நிறத்தில் நீ உடையணிந்த நாள்..
மழை நாளில் உன் குடைக்குள் நுழைந்த நாள்..
உன் தோட்ட ரோஜாவை எனக்கு பரிசளித்த நாள்..
நான் கண்ணடிக்க நீ வெக்கப்பட்ட நாள்..
அழகாய் சிரிக்கிறாய் எனக் கவிதை சொன்ன நாள்..
எனக்கு பிடித்த புத்தகத்தை பரிசளித்த நாள்..
காதலை சொல்வதற்கு பதில் காபி சாப்டியா என உளறிய நாள்..
தட்டுத்தடுமாறி கடைசியாய் காதலை சொன்ன நாள்..
நானும் காதலிக்கிறேன் என்றதும் பரபரப்பில் "நன்றி" சொன்ன நாள்..
இரண்டு நாட்கள் எனை காணமல் வீட்டிற்கே வந்த நாள்..
உன் காய்ச்சல் குணமாக என் கையை கிழித்துக் கொண்ட நாள்..

என் கண்ணில் தூசி விழுந்ததற்காக நீ கண் கலங்கிய நாள்.

எதிர்பாராமல் ஒரே நிற உடையில் சந்தித்த நாள்..
உன்னோடு கைக்கோர்த்து நடந்த நாள்..
இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்த நாள்..
முதன்முறையாய் உனை காண நான் காத்திருந்த நாள்..
செல்லமாய் என்னிடம் கோபித்து கொண்ட நாள்..
உன் சமையல் என்பதற்காக உப்பில்லா உணவையும் உவகையோடு உண்ட நாள்..
இதமாய் உன் தோள் சாய்ந்து உறங்கிய நாள்..
தோல்வியின் போது உன் மடியில் முகம் புதைத்து அழுத நாள்..
வெற்றியின் போது உன் கரம் பிடித்து மகிழ்ந்த நாள்..
இத்தனை நாட்கள் கொண்டாட இருக்க..
நமக்கெதற்கு தனியாய் "காதலர் தினம்"

முதல் காதல்




அன்று தான் கண்டேன்
வெள்ளை மேகங்களில்
இரவு மிதந்து செல்வதை
அவள் கண்களில்....

அவளை பார்த்த நொடியில்
புதிதாய் பிறக்க வில்லை...
இறந்து மீண்டும் பிறந்தேன்.!


அமாவாசை இருட்டில்
நிலவு தெரிந்தது...
சுட்டெரிக்கும் வெயிலில்
பனி துளி கண்டேன்...

புதிராய் வாழ்கை...
நிதானமாய் நிலை கொலைத்ததது...
பிறகு என்ன...
அவளை சுற்றியே என் பின்பம்...
அவளது மந்திர பார்வையில்...
மாதங்கள் களித்தேன்.!

அவள் தான் என்னவள்...
என்ற வியப்பு !
நான் தான் அவளுடையவனா ?
என்ற தவிப்பு...
தவிப்புகள் தொடர்ந்தன தினமும்...

அன்று மட்டும் என்னவோ,
அவள் பார்வையில் புதிய பரிணாமம் !
பார்வை சாரலை வீசி விட்டு,
மறைந்து கொண்டு இருந்தாள்...

அவள் பார்வையில் இருந்து மீண்டு
கொன்றுந்தேன்...
எட்ட சென்று...
புன்னகைத்த நொடியில்
உணர வைத்தாள் ,
அவள் காதலை...

கண்களால் காதல்
சொன்னதினாலோ என்னவோ,
ஒரு நாள்
என்னை குருடனாக்கி...
விலகி சென்றாள்...
காதல் பொய்த்து போனது.
உண்மை தான்
பொய்த்தது அவள் காதல் மட்டுமே...


என் காதல் மாறாமல் இன்னமும்...
ஒரு ஓரத்தில் பூத்து கொண்டு தான் இருக்கிறது.
முதலில் கிடைத்த பார்வை...
அனுபவம்...
முதல் கனவு...
நான் தேர்ந்து எடுத்த முதல் பெண்...
முதல் காதலி...
முதல் காதல்...
தோற்றாலும்,
நினைவுகளில் மலர்ந்து கொண்டு தான் இருப்பாள்...
என் டைரியில் எங்கோ ஒரு ஓரத்தில் அவள்,
இருந்து கொண்டு தான் இருப்பாள்
என் எண்பது வயதிலும்...

வேதியியல் மாற்றம்



உன்னால் என்னுள் நிகழ்ந்து விட்ட
வேதியியல் மாற்றங்களுக்கு
புதிய அகராதியில் தேடித் தேடி
காதல் என பழைய பெயர் வைத்தேன்!


நீயோ
கனவுகள் கொடுத்தாய் !
கண்களை எடுத்து கொண்டாய் .....
காதலோடு வாழ வைப்பாய் என்றிருந்தேன் ...
கவிதைகளோடு வாழ வைத்திருக்கிறாய்!

தொட்டாச் சிணுங்காக் காதல்


பொய்யான கோபங்களும்
சின்னச் சின்ன தாபங்களும்
அதீதமான வியப்புக்களும்
அபத்தமான பேச்சுக்களும்
ஆழமான தேடலும் கொண்ட
நிஜமான காதல் !
இது,
நிழல் மனிதர்கள் தொடர்ந்தாலும்
நெருஞ்சி முற்கள் நெருடினாலும்
கருங்கற்கள் இடறினாலும்
காயம்பட்டு நொந்தாலும்
தொடர்ந்து செல்கின்ற
தொட்டாச் சிணுங்காக் காதல் !
நீ பார்கிறாயா என பார்பதையே
எனக்கு பார்வை கிடைத்ததன்
பயனாக உணர்கிறேன் !
இரவுப் பொழுது
எப்படி நகரப் போகிறது என்று
பயந்து தூங்காமலே தூங்குகிறேன் !
யார் நீ ?
முழுவதும் அறியும் முன்னே
முன்னுரை வரைகிறேன் !
என் வீடு எதிரியின் குகையாகிறது !
என் சொந்தம் கொடும் பகையாகிறது!
எதிர் பால் நீ இருக்கையிலே
எதிர்ப்பார் தேவையில்லை என்கிறது !
பல்லியைப் பார்த்து நீ பயப்படுகையிலே
பல்லியைப் பிடித்து
பயில்வான் பேர் வாங்கி
பல்லிளிக்கத் தோன்றுகிறது !
இத்தனை வருடம் இல்லாமல்
திடீரென்று
காசு கொடுத்து
கிரீட்டிங் கார்டு வாங்கத் தோன்றுகிறது !
கவிதையென்ற பெயரில்
கன்னாபின்னாவென்று
கிறுக்கத் தோன்றுகிறது !
காதல் -
தோணக் கூடாததை எல்லாம்
தோணச் செய்கிறது !
தோணுவதை எல்லாம்
தேடச் செய்கிறது !

இதயத்தைத் தேடாதீர்கள்



காதல் விபத்தில்
இறந்தவன் நான் !
பிரேதப்பரிசோதனையில் என்
இதயத்தைத் தேடாதீர்கள் !
அதை நான் அவளிடம்
இழந்துவிட்டேன்!

கவிஞனாகி இருக்கிறேன்



கள்ளியே !!!

உன் நினைவுகளை
அசைபோட்டு போட்டு
நானும் கால்நடை
கூட்டத்தில் சேர்ந்துவிட்டேன் !

நீ தூசு தட்டிவிட்ட
சட்டைதான்,
இன்று என்வீட்டின்
பெரிய பொக்கிஷம் !
நீ தட்டிய தூசினை
இன்றும் தேடுகிறேன்
நன்றி சொல்வதற்காக !

நீ அழும்போது
வருத்தமாகத்தான் இருந்தது,
என்ன செய்வது
கூழ் குடிக்கும் ஏழைக்கு
கோடி கிடைத்ததுபோல்
உன் note
என்கையில் கிடைக்க
திருப்பிதர மனமில்லையடி !

எனக்கு மட்டும்
ஆசை இருக்காதா ?
உன்னுடன் நெருக்கமாய் இருக்க ,
அதனால்தான் கோபத்தில்
எரித்துவிட்டேன் உன் கைக்குட்டைகளை !

ஆனால் உனக்கு தெரியாது
உன் வியர்வைத்துளி
விழுந்த மண்துகள் கூட
என்வீட்டு A/Cஇல் தூங்குகிறது !

நான் பேசி சிரிக்கவேண்டிய இடத்தில்
நாள் முழுதும் தான் பேசி சிரித்ததால்தான்
சேட்டுகடையில் விற்று விட்டேன்
உன் கொலுசுகளை !

நீயும் என்னை காதலித்திருந்தால்
கணவனாகியிருப்பேன் இப்போது
கவிஞனாகி இருக்கிறேன்.
எப்போது
உன் காதலனாகி கணவனாகி ........???

காதல் கோலங்கள்...



கோலம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே
வந்துவிடுகின்றன எறும்புகள் என்று,
சலித்துக்கொள்கிறாய் நீ!
அவற்றுக்குத்தானே தெரியும்
அவை வெறும் கோல மாவு அல்ல,
ஒரு தேவதையின் கைப்பட்ட மாவு என்பது...

நீ போட்டு முடித்த கோலத்தில்
கோலம் போட்டிருந்தன உன்
நெற்றியோரத்திலிருந்து விழுந்த
வியர்வைப்பொட்டுகள்...

மார்கழியின் அதிகாலைகளில்
நீ போடுகிற கோலத்தையும்
கோலம் போடுகிற உன்னையும் -பார்ப்பதற்கு
யார் முதலில் வருவதென்பதில் என்னிடம்
ஒவ்வொரு முறையும் தோற்றுப்போகிறது
சூரியன்...

காதல் செய்தேன்



யதார்த்த பாதையில்
இறைவன் நடப்பதாய்
பேருந்து நிறுத்தத்திற்கு
அவளும் வந்தால்...

கதவை திறப்பவனுக்கே
காற்று கொஞ்சும்
இதயம் திறப்பவர்க்கே
அவளும் சொந்தம்...

பிரமிடின் மடிப்புகள்
இடையில் எப்படி?
மம்மியாயிருந்த என் ஆன்மா
மனிதனாய் மாறுகிறது...

இன்னும் துடைக்கவில்லை
உதட்டில் ஐஸ்கிரீம்!
தும்மலுக்கு பயந்து
முகம் மறைக்கிறது கைக்குட்டை!

மேகம் தாண்டி வரும்
வெயில் இவளை தீண்டாமலிருக்க
தன் நிழலிலே தன்னை மறைக்கும் சூரியன்!
"காதல் செய்வோம் அன்பீரே
அன்பை காதல் செய்வோம்
காதலில் அன்பு செய்வோம்
அன்பாய் காதல் செய்வோம் "

ஆதலினால் காதல் செய்தேன்
கனவில் நினைவில் உயிரில்...

ஆதலினால் காதல் செய்தேன்
நேற்று இன்று நாளை ...

myfreecopyright.com registered & protected

சுடுவதற்கு தடை

Creative Commons License
சத்யாவின் குட்டி டைரி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

நான்...

My photo
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நட்போடு சத்யா...

என் ஊக்க மாத்திரைகள்



சிலருக்கு பிடித்திருக்கலாம்! – மகிழ்ச்சி

பலரை இம்சித்திருக்கலாம்! – மன்னிக்க!


திட்டோ?
பாராட்டோ?


9003327433

LSATHYA.CSE@GMAIL.COM

எனக்கு தெரியும்


Template Brought by :

blogger templates

Best Blogger Gadgets