சொர்க்கத்தில் இருந்து நரகத்தை நோக்கி


ஒன்பது மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனும் கெளம்பும் போது
நான் மட்டும் தூங்கிக்கிட்ருப்பேன்
எட்டு முப்பது ஆகுற வரைக்கும்...

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோற்றது இல்ல

விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சா,
வேற எதுவும் யோசிக்காம
வேக வேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல துறையூர் போயி
தியேட்டர்ல படம் பாக்க!

'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாலியறுப்பான்!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல.
ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பது பேர் பாஸ் ஆனதுண்டு!

நம் நட்பில் கவலைக்கு இடமேஇல்லை

வகுப்பு ஏட்டில் பெயர் இருக்கிறது,
ஆள் யார்?அது வாத்தியருக்கு விளங்கவில்லை

ஆறு மாதம் முக்கி முக்கி படிக்க வேண்டியதை
ஒரே இரவில் எப்படி படிக்கிறோமோ தெரியவில்லை

ஒரே வண்டியில் நான்கு பேர் சென்று
சறுக்கி விழுந்த போது வலி தெரியவில்லை

எதையும் நண்பணிடத்தில் மறைத்ததில்லை
சுற்றுச் சூழலை நினைத்ததில்லை

பல மொழிகள் பேசும் மாணவர்கள் இருந்தாலும்
நட்புக்கு மட்டும் மொழி இருந்ததில்லை

வகுப்பை தவிர கல்லூரியின் மற்ற இடங்களில்
நாம் கால் வைக்காத இடமில்லை

வந்த முதல் நாளில், தெரிந்தவர் தவிர
வேறொருவருடன் பேசி நினைவில்லை

ஒரே வாரத்தில் மாமன் மச்சான் உறவு
எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை

கல்லூரி முடிந்தும் வீடு திரும்ப மனமில்லை
நட்புக்கு மட்டும் என்றும் விடுமுறையில்லை

பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,

மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!

படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...

அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

exam time ல உதவி பண்ணுற நன்பனை பார்த்து
மனசு கட்டபொம்மனா
நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா
கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம,
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
சமாளிச்சி எழுந்து போவோம்...

நாட்கள் நகர நகர,
வருஷங்கள் ஓடுது,
மனசு கணக்குது,

மிச்சம் இருப்பது இன்னும் ஒரு வருஷம் தான்,
பிரிவை நினைத்தாலே கொடுமையா இருக்கு,

இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,

தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
'மாமா' 'மச்சான்' மாறாது!

0 comments:

Post a Comment

myfreecopyright.com registered & protected

சுடுவதற்கு தடை

Creative Commons License
சத்யாவின் குட்டி டைரி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

நான்...

My photo
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நட்போடு சத்யா...

என் ஊக்க மாத்திரைகள்



சிலருக்கு பிடித்திருக்கலாம்! – மகிழ்ச்சி

பலரை இம்சித்திருக்கலாம்! – மன்னிக்க!


திட்டோ?
பாராட்டோ?


9003327433

LSATHYA.CSE@GMAIL.COM

எனக்கு தெரியும்


Template Brought by :

blogger templates

Best Blogger Gadgets