கவிஞனாகி இருக்கிறேன்
கள்ளியே !!!
உன் நினைவுகளை
அசைபோட்டு போட்டு
நானும் கால்நடை
கூட்டத்தில் சேர்ந்துவிட்டேன் !
நீ தூசு தட்டிவிட்ட
சட்டைதான்,
இன்று என்வீட்டின்
பெரிய பொக்கிஷம் !
நீ தட்டிய தூசினை
இன்றும் தேடுகிறேன்
நன்றி சொல்வதற்காக !
நீ அழும்போது
வருத்தமாகத்தான் இருந்தது,
என்ன செய்வது
கூழ் குடிக்கும் ஏழைக்கு
கோடி கிடைத்ததுபோல்
உன் note
என்கையில் கிடைக்க
திருப்பிதர மனமில்லையடி !
எனக்கு மட்டும்
ஆசை இருக்காதா ?
உன்னுடன் நெருக்கமாய் இருக்க ,
அதனால்தான் கோபத்தில்
எரித்துவிட்டேன் உன் கைக்குட்டைகளை !
ஆனால் உனக்கு தெரியாது
உன் வியர்வைத்துளி
விழுந்த மண்துகள் கூட
என்வீட்டு A/Cஇல் தூங்குகிறது !
நான் பேசி சிரிக்கவேண்டிய இடத்தில்
நாள் முழுதும் தான் பேசி சிரித்ததால்தான்
சேட்டுகடையில் விற்று விட்டேன்
உன் கொலுசுகளை !
நீயும் என்னை காதலித்திருந்தால்
கணவனாகியிருப்பேன் இப்போது
கவிஞனாகி இருக்கிறேன்.
எப்போது
உன் காதலனாகி கணவனாகி ........???
12/04/2009 12:15:00 AM
|
Labels:
கவிதைகள்
|
Subscribe to:
Post Comments (Atom)
சுடுவதற்கு தடை
சத்யாவின் குட்டி டைரி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
நான்...
- சத்யா
- புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நட்போடு சத்யா...
என் ஊக்க மாத்திரைகள்
Blog Archive
-
▼
2009
(33)
-
▼
December
(17)
- சம்பத் ஒரு சகாப்தம்
- பொக்கிஷங்கள்
- கடைசியாய் நானும்
- சொர்க்கத்தில் இருந்து நரகத்தை நோக்கி
- உண்மைக் காதல்.....
- இறைவனுக்கு
- திரும்ப தேடும் நாட்கள்...
- எல்லோரும் அமர்ந்திருந்த அந்தக் கூட்டத்தில்என்னை ...
- காதலர் தினம்
- முதல் காதல்
- வேதியியல் மாற்றம்
- தொட்டாச் சிணுங்காக் காதல்
- இதயத்தைத் தேடாதீர்கள்
- கவிஞனாகி இருக்கிறேன்
- காதல் கோலங்கள்...
- காதல் செய்தேன்
-
▼
December
(17)
சிலருக்கு பிடித்திருக்கலாம்! – மகிழ்ச்சி
பலரை இம்சித்திருக்கலாம்! – மன்னிக்க!
திட்டோ?
பாராட்டோ?
9003327433
பாராட்டோ?
9003327433
LSATHYA.CSE@GMAIL.COM
0 comments:
Post a Comment